மேலும் செய்திகள்
இளநிலை உதவியாளராகதேர்வானவர்களுக்கு வாழ்த்து
28-Feb-2025
சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளர்கள்மாநில பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகிருஷ்ணகிரி:பட்டு வளர்ச்சித்துறை சார்பில், மாநில அளவில் சிறந்த விதைக்கூடு உற்பத்தி மற்றும் தானியங்கி பட்டு நுாற்பில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.அதன்படி, மாநில அளவில் சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளர்களாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், என்.ஆர்.பாளையம் மஞ்சுநாதாவுக்கு முதல் பரிசாக, ஒரு லட்சம் ரூபாய், வேப்பனஹள்ளி வட்டம், ராமசந்திரம் நாகராஜ் என்பவருக்கு, 2ம் பரிசாக, 75,000 ரூபாய், 3ம் பரிசாக சாந்தமூர்த்தி என்பவருக்கு, 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. அதேபோல, மாநில அளவில் சிறந்து விளங்கிய தானியங்கி பட்டு நுாற்பாளர்களாக சூளகிரி வட்டம், பெத்தசிகரலப்பள்ளியை சேர்ந்த முகமது மதீனுல்லா என்பவருக்கு, ஒரு லட்சம் ரூபாய், போச்சம்பள்ளி வட்டம், வடமலம்பட்டியை சேர்ந்த சேகர் என்பவருக்கு, 75,000 ரூபாய், வழங்கப்பட்டது. பரிசுகள் பெற்ற பட்டு விவசாயிகள் அனைவரையும், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) கவிதா, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள் சண்முகப்பிரியா (கிருஷ்ணகிரி), செல்வி (ஓசூர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
28-Feb-2025