கி.கிரியில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா2,772 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் நடந்த ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், 2,772 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை எதிரில், கிருஷ்ணகிரி, கிழக்கு மாவட்டம், நகர, தி.மு.க., சார்பில் தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினின், 72வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர பொறுப்பாளர்கள் மேற்கு அஸ்லம் கிழக்கு வேலுமணி ஆகியோர் வரவேற்றனர். கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை வகித்து பேசினார்.உணவுத்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி, மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், பெண்களுக்கு தையல் இயந்திரம், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை, பெண்களுக்கு புடவைகள், பாத்திரங்கள் என, 2,772 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.