உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சினிமாக்காரரால் ஒன்றும் செய்ய முடியாது ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பேச்சு

சினிமாக்காரரால் ஒன்றும் செய்ய முடியாது ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பேச்சு

ஓசூர்: ''தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நமக்கு வெற்றி தான். சினிமாக்காரரால் ஒன்றும் செய்ய முடியாது,'' என, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பேசினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர, தி.மு.க., பொது உறுப்பி-னர்கள் கூட்டம், மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் தலை-மையில் நேற்று நடந்தது. ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., பேசியதாவது:நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள், 2026ல் முதல்வராக வேண்டும் என நினைக்கின்றனர். தி.மு.க.,வில் இளைஞர்களுக்கு பதவிகள் வழங்கப்படும். தி.மு.க., துவக்கப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவ-டைய போகிறது. ஓசூர், தளி, வேப்பனஹள்ளியில், முறையே மேயர் சத்யா, தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் ஆகியோர் தலைமையில், கருணா-நிதி சிலை வைக்க நிலம் வாங்கி, தலைமை கழகத்திடம் அனு-மதி பெற்று, சிலை நிறுவப்படும். முதல்வர் ஸ்டாலின் தலை-மையில் நமக்கு வெற்றி தான். சினிமாக்காரரால் ஒன்றும் செய்ய முடியாது. தி.மு.க.,காரனே, தி.மு.க.,வினரை குறை கூறினால் எப்-படி. பல பிரச்னைகள் இருக்கும். தவறுகள், குறைகள் இருந்தால், நேரடியாக என்னிடம் கூறுங்கள். மாற்றுக்கட்சியினரிடம் சென்று கூறாதீர்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜ-யகுமார், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்-வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் கண்ணன், தலைமை செயற்குழு உறுப்-பினர் எல்லோராமணி, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை