உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வேளாண் அறிவியல் மையத்தில் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

வேளாண் அறிவியல் மையத்தில் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி: எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தில், பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில், வேளாண் அறிவியல் மையம் கடந்த, 1974ல் துவங்கி, 50வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், ஆண்டு முழுவதும் பொன்விழா ஆண்டாக, இந்தியாவிலுள்ள அனைத்து வேளாண் அறிவியல் மையங்களிலும் கொண்டாடப்-பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தில் பொன்விழா ஆண்டு கடந்த, 2 நாட்கள் கொண்டாடப்பட்டது. பொன்விழா தொடர் ஓட்டம் ஜோதியை, வேலுார் வேளாண் அறிவியல் மையத்தில் இருந்து பெற்று விவசாயிகள் மற்றும் மாணவர்கள் பார்வைக்காக எலுமிச்-சங்கரி வேளாண் அறிவியல் மையத்தில் வைத்து, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் ரமேஷ்பாபு, வேளாண் அறிவியல் மையத்தால் விவசாயிகள் பெறும் பயன்கள், மையத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். மேலும், மா மற்றும் நெல்லி நாற்றுகளை சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்-பட்டது. இயற்கை விவசாயம், ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் மதிப்பு கூட்டுதலில் சிறப்பாக செயல்பட்டு வரும் விவசா-யிகளுக்கு சான்றிதழ், வேளாண் அறிவியல் மையத்தால் பயிற்-சிகள் மற்றும் முதன்மை செயல்விளக்கத்தில் விவசாயிகளின் வெற்றிக்கதைகள் ஆவணப்படுத்தப்பட்டது. வேளாண் பல்க-லைக்கழக விவசாய மாணவர்களால், தேமோர் கரைசல் மற்றும் பூச்சி விரட்டி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ