உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 13ல் கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி

13ல் கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் மற்றும் அரங்குகள் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு அம்சங்கள், குறித்து அதிகாரிகளுடனான ஆலோனை கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது.இது குறித்து அவர் கூறுகையில், ''கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி விளையாட்டு மைதானத்தில், 30வது அகில இந்தி மாங்கனி கண்காட்சி வரும், 13ல், துவங்கி, 28 நாட்கள் நடக்கிறது. துவக்க விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்கின்றனர். அரசு துறைகள் சார்பில் அரங்குகளும், தனியார் அங்காடிகள் மற்றும் கலையரங்கம், உள்-ளிட்டவற்றுடன், பள்ளி மாணவர்களின் கலைநிகழச்சிகள், விவசா-யிகளுக்கான கருத்தரங்களும் நடத்தப்படும்,'' என்றார்.மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை