உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சபரிமுத்து சித்தருக்கு குருபூஜை

சபரிமுத்து சித்தருக்கு குருபூஜை

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் அருகே, ஜீவசமாதியான மகான் சற்குரு சபரிமுத்து சித்தருக்கு, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரம் அன்று குருபூஜை நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று காலை, 9:00 மணிக்கு, வேள்வி மற்றும் திருமுறை பாராயணம் நடந்தன. காலை, 10:00 மணிக்கு, கையிலாய கங்கை புனித நதி தீர்த்தங்களுடன், சற்குரு சபரிமுத்து சுவாமிக்கு பால் மற்றும் சந்தன அபிஷேகம் நடந்தன. தொடர்ந்து அலங்காரமும், தீபாராதனையும், வழிபாடும் நடந்தன. பின்னர், 11:30 மணிக்கு, மகேஷ்வர பூஜை நடந்தது. இதில், சிவனடியார்கள் சிவானந்த கருணாசாமி, சூடாமணி, சிவசங்கரன், பாபுராவ், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சிவனடியார்கள் திருக்கூட்டம் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம், 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, சிவானந்த கருணாசாமி மற்றும் அவரது சீடர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை