உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மஞ்சப்பை விழிப்புணர்வு கருத்தரங்கம்

மஞ்சப்பை விழிப்புணர்வு கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாகத்தில் செயல்படும், கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மஞ்சப்பை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி முதல்வர் அனிஷா ராணி தலைமை வகித்தார். பேராசிரியர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் கருத்தரங்கில் பேசுகையில், ''நாம் வாழும் பூமிக்கு தீமை செய்கின்ற பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகின்ற மக்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்க வேண்டும். நம்முடைய முன்னோர்களின் பாரம்பரிய மரபுப்படி துணி பைகளை பயன்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் மஞ்சப்பை திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,'' என்றார்.முன்னதாக, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேச்சு போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மஞ்சப்பை பரிசாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ