உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கழிவுநீர் குடித்த மாடு சாவு

கழிவுநீர் குடித்த மாடு சாவு

கழிவுநீர் குடித்த மாடு சாவுஅரூர், :அரூர் அடுத்த கோபாலபுரத்தில், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. ஆலையில் தற்போது கரும்பு அரவை நடந்து வருகிறது. ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் அருகிலுள்ள கிணறுகள் மற்றும் விவசாய நிலங்களில் கருமை நிறத்தில் கழிவு நீர் தேங்கி வருவதுடன், துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் விவசாயி மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு கழிவு நீரை குடித்ததால், உயிரிழந்ததாக கோபாலபுரம் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை