வேன் மோதி வாலிபர் பலி
வேன் மோதி வாலிபர் பலிபோச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த, சவுட்டள்ளி, குட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யகுமார், 23. இவர், சூளகிரியிலுள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். நேற்று காலை, 8:00 மணிக்கு ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் காவேரிப்பட்டணத்திலிருந்து தளிப்பட்டிக்கு சென்றார். அப்போது, தென்பெண்ணை ஆற்று பாலம் அருகே, எதிரே வந்த அசோக் லேலண்ட் தோஸ்த் வேன் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.