உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போதையில் பெண்களைதாக்கிய இருவர் கைது

போதையில் பெண்களைதாக்கிய இருவர் கைது

போதையில் பெண்களைதாக்கிய இருவர் கைதுகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, வீரப்பன் நகரை சேர்ந்தவர் பாக்கியம், 48. இவரது மகன் சண்முகம், 19. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கடந்த, 11ல், சண்முகம் தன் தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சண்முகம், தாய் பாக்கியத்தை தாக்கினார். அது குறித்து பாக்கியம், கிருஷ்ணகிரி டவுன் போலீசில் அளித்த புகார்படி சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். அதேபோல், ஊத்தங்கரை காமராஜ் நகரை சேர்ந்தவர் மாளவிகா, 21. கடந்த, 10ல் தன் வீட்டு முன் நின்ற அவரை, மது போதையில் வந்த பாரதிபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார், 24, தாக்கினார். மாளவிகா புகார் படி, ஊத்தங்கரை போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை