மேலும் செய்திகள்
வடசித்துார் பள்ளியில் நூற்றாண்டு விழா
08-Mar-2025
கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளி ஆண்டு விழாஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த, கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. மத்துார் வட்டார கல்வி அலுவலர் லோகநாயகி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் சரவணன் பங்கேற்றார். கெரிகேப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செந்தில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவப்பிரகாசம், ஆசிரியர் பயிற்றுனர்கள் சிவக்குமார், தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், 2025- - 26ம் கல்வி ஆண்டிற்கு, முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை நடந்தது. புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உபகரணங்களுடன் கூடிய, ஸ்கூல் பேக் வழங்கி வரவேற்கப்பட்டது. ஆண்டுவிழாவையொட்டி நடந்த பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் சுபாஷினி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் வீரமணி செய்திருந்தார்.
08-Mar-2025