உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டாஸ்மாக் முன் போஸ்டர்பா.ஜ.,வினர் மீது வழக்கு

டாஸ்மாக் முன் போஸ்டர்பா.ஜ.,வினர் மீது வழக்கு

டாஸ்மாக் முன் போஸ்டர்பா.ஜ.,வினர் மீது வழக்குகிருஷ்ணகிரி:தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் முன், பா.ஜ., சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கிருஷ்ணகிரி டவுன், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் முன்புள்ள சுவரில் முதல்வர் ஸ்டாலின் படத்துடன் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள், பா.ஜ.,வினரால் ஒட்டப்பட்டன. இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசில், 2 புகார்களும், போச்சம்பள்ளியில் ஒரு புகாரும், ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில், 3 புகார்களும் சம்பந்தப்பட்ட கடைகளின் மேற்பார்வையாளர்கள் கொடுத்தனர். அந்த புகார்கள் படி, கிருஷ்ணகிரி நகர, பா.ஜ., தலைவர் விமலா, முன்னாள் கிழக்கு மாவட்ட துணை தலைவரான போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம், ஊத்தங்கரை மத்திய ஒன்றிய தலைவரான கிரிதரன், 38 உட்பட, 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை