உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம்

ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம்

ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம்தளி:கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே முதுகேரிதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், 32. விவசாயி; இவர் நேற்று அதிகாலை பைக்கில் வந்தார். ஊரின் அருகே நின்றிருந்த ஒற்றை யானை தாக்கியதில் படுகாயமடைந்த அவர், அங்கிருந்த பள்ளத்தில் விழுந்தார். சாலையில் கிடந்த பைக்கை, ஒற்றை யானை சேதப்படுத்தியது. இதில் யானையின் தந்தத்தின் ஒரு சிறிய பகுதி உடைந்து கீழே விழுந்தது. படுகாயமடைந்த நாகராஜ், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். யானையின் சேதமான தந்தங்களை எடுத்து, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை