உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அம்பேத்கர் பிறந்த நாள்; கட்சியினர் மரியாதை

அம்பேத்கர் பிறந்த நாள்; கட்சியினர் மரியாதை

அம்பேத்கர் பிறந்த நாள்; கட்சியினர் மரியாதைகிருஷ்ணகிரி:அம்பேத்கரின், 135வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தாலுகா அலுவலகம், செட்டியம்பட்டி அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு அவரது தலைமையில் தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த, வி.சி., சார்பில் பஸ் ஸ்டாண்ட் அருகிலிருந்து ஊர்வலமாக சென்ற அக்கட்சியினர் தாலுகா அலுவலகம் அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.கிருஷ்ணகிரி நகர, காங்., தலைவர் லலித் ஆண்டனி தலைமையில் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. பா.ஜ., மாவட்ட தலைவர் கவியரசு தலைமையில், மாநில செய்தி தொடர்பாளர் முன்னாள் எம்.பி., நரசிம்மன், நகர தலைவி விமலா மற்றும் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். * ஓசூரிலுள்ள கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட அலுவலகத்தில், அம்பேத்கர் உருவ படத்திற்கு, மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர். மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாநகர செயலாளர் மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் ஞானசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், உளியாளத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு, மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமையில், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓசூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.* ஊத்தங்கரை ரவுண்டானாவிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை