உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோக் அதாலத்1,294 வழக்குகளில் ரூ.9.54 கோடிக்கு தீர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோக் அதாலத்1,294 வழக்குகளில் ரூ.9.54 கோடிக்கு தீர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 'லோக் அதாலத்'1,294 வழக்குகளில் ரூ.9.54 கோடிக்கு தீர்வுகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவ ட்ட நீதிமன்ற வளாகத் தில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், 'லோக் அதாலத்' என்ற தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவ ட்ட முதன்மை நீதிபதியுமான லதா தலைமை வகித்து, தீர்வு காணப்பட்டோருக்கான காசோலையை வழங்கி பேசுகையில்,''கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள மோட்டார் வாகன விபத்து, வங்கிகடன், காசோலை, பாகப்பிரிவினை, குடும்பநல வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள் உள்ளிட்டவை என, 1,294 வழக்குகளுக்கு, 9.54 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது,'' என்றார்.கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், மாவட்ட குடும்ப நல நீதிபதி நாகராஜன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோகுலகிருஷ்ணன், கூடுதல் சார்பு நீதிபதி ஜெனிபர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெயந்தி, கூடுதல் மகளிர் நீதித்துறை நீதிபதி இருதயமேரி, முதலாவது நீதித்துறை நடுவர் கார்த்திக் ஆசாத், 2வது நீதித்துறை நடுவர் ஸ்ரீவஸ்தவா, வழக்கறிஞர் சங்க தலைவர் கோவிந்தராஜலு, செயலாளர் சக்திநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை