உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2ம் கட்டதிட்டத்திற்கு கருத்து கேட்பு கூட்டம்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2ம் கட்டதிட்டத்திற்கு கருத்து கேட்பு கூட்டம்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2ம் கட்டதிட்டத்திற்கு கருத்து கேட்பு கூட்டம்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு (2-ம் கட்டம்), ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் நிதியுதவி அளிப்பது குறித்து, கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் பாலசுப்பரமணியம், சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். தொடர்ந்து, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை பற்றியும், பயனடையும் பகுதி கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கூற, அதிகாரிகள் குறிப்பெடுத்து கொண்டனர்.ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் ரவிகுமார், அனைத்து பி.டி.ஓ.,க்கள், அனைத்து நிலை பொறியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை