உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி மாணவிக்கு திருமணம் 5 பேர் மீது ‍போலீசார் வழக்கு

பள்ளி மாணவிக்கு திருமணம் 5 பேர் மீது ‍போலீசார் வழக்கு

பள்ளி மாணவிக்கு திருமணம் 5 பேர் மீது ‍போலீசார் வழக்குகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியை சேர்ந்த, 9ம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவிக்கு, காவேரிப்பட்டணத்தை சேர்ந்த, 25 வயது கார்பென்டருடன் நேற்று முன்தினம் திருமணம் நடந்துள்ளது. குந்தாரப்பள்ளி அருகிலுள்ள முருகர் கோவிலில் நடந்த திருமணத்தில், பெற்றோரும் கலந்து கொண்டுள்ளனர்.மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் விசேஷம் நடக்க இருப்பதாகவும், அனைவருக்கும் ஆடைகள் வாங்க செல்கிறோம் எனவும் கூறியுள்ளார். சந்தேகமடைந்த ஆசிரியர்கள், இது குறித்து விசாரித்த நிலையில், நேற்று பள்ளிக்கு வந்த மாணவி கழுத்தில் தாலிக்கயிறு இருந்தது தெரிந்தது. இது குறித்து அவர்கள் அளித்த தகவல் படி, குழந்தைகள் நல அலுவலகம் மற்றும் சமூகநலத்துறை அலுவலக ஊழியர்கள், பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். இதில், 9ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் நடந்தது தெரிந்தது. அவர்கள் புகார் படி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் பெற்றோர், சிறுமியை திருமணம் செய்த கார்பென்டர் அவரது பெற்றோர் உள்பட, 5 பேர் மீது, குழந்தைகள் திருமண தடை சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !