மேலும் செய்திகள்
டூவீ லரில் கத் தி யுடன் சென்ற வாலிபர் கைது
06-Aug-2024
கிருஷ்ணகிரி: - கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை நார்சம்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் திருப்பதி, 51. கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 24- மாலை, 5:00 மணிக்கு, பெரியதள்ளப்பாடி மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் திருப்பதியை மிரட்டி அவரிடமிருந்து, 500 ரூபாயை பறித்துச் சென்றார். திருப்பதி புகார் படி, சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தியதில், வழிப்பறி செய்தது பெரிய தள்ளப்பாடியை சேர்ந்த சந்துரு, 23, என தெரிய வந்தது. அவர் மீது சிங்காரப்பேட்டை, கள்ளக்குறிச்சி போலீசில் வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
06-Aug-2024