மேலும் செய்திகள்
இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
09-Jan-2025
சமத்துவ பொங்கல் விழாஓசூர், :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வெங்கடேஷ் நகர் சப்தகிரி பள்ளியில், தமிழியக்கம் சார்பில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழியக்க அமைப்பு செயலாளர் வணங்காமுடி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாணிக்கவாசகம், ஓசூர் முத்தமிழ் மன்ற துணை செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். ஓசூர் மாநகர மேயர் சத்யா, சமத்துவ பொங்கலை துவக்கி வைத்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளது போன்ற குடிசை வீடு, கிணறு, மாட்டு வண்டி, உலக உருண்டை போன்ற பல்வேறு விதமான பொருட்கள் அடங்கிய அரங்கை பார்வையிட்டார். விழாவில் பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு நுால்கள் பரிசாக வழங்கப்பட்டன. தமிழியக்க மாநகர செயலாளர் வடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
09-Jan-2025