மூச்சுத்திணறலில் குழந்தை சாவு
மூச்சுத்திணறலில் குழந்தை சாவுகிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சொன்னநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 29. இவரது மனைவிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்தது. கடந்த, 14ல் குடும்பத்துடன், செம்படமுத்துாரிலுள்ள தன் உறவினர் வீட்டுக்கு வெங்கட்ராமன் சென்றுள்ளார்.அப்போது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை இறந்தது. கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.