மாணவர்களுக்கு இலவச கண்ணாடி
மாணவர்களுக்கு இலவச கண்ணாடிஓசூர், :ஓசூர், ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஓசூர் ரவுண்ட் டேபிள் மற்றும் ஓசூர் லேடீஸ் சர்க்கிள் ஆகியவை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச கண் பரிசோதனை முகாமை நடந்தின. இதில், 31 மாணவ, மாணவியருக்கு கண் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. ஓசூர் ரவுண்ட் டேபிள் தலைவர் வினோத், லேடீஸ் சர்க்கிள் நிர்வாகி கிருத்திகா ஆகியோர் கண்ணாடிகளை வழங்கினர். ஓசூர் மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதர், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் கருணாநிதி, தலைமையாசிரியை நர்மதா தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.