உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு

ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு

ஒற்றுமை உறுதிமொழி ஏற்புஓசூர்:காந்தி நினைவு தினத்தையொட்டி ஓசூர், ஏரிக்கரை காந்தி சிலை முன், தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில், ஒற்றுமை குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. அமைப்பின் பொறுப்பாளர் சேதுமாதவன் தலைமை வகித்து, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காந்தி மறைவு குறித்தும், மக்கள் ஒற்றுமை குறித்தும், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் வனவேந்தன், காங்., மாவட்ட தலைவர் முரளிதரன், சி.பி.எம்., மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ