உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாகனம் மோதிமெக்கானிக் சாவு

வாகனம் மோதிமெக்கானிக் சாவு

வாகனம் மோதிமெக்கானிக் சாவுஓசூர்:ஓசூர் அடுத்த சூடாபுரம் ஜீவா நகரை சேர்ந்தவர் சிவக்குமார், 40, வாகன மெக்கானிக். இவர், கடந்த, 1ம் தேதி இரவு, டாடா ஏஸ் பிக்கப் வேனை, சோதனை ஓட்டத்திற்காக ஓட்டி வந்தார். அப்போது, வாகனம் பழுதாகவே, பாகலுாரிலுள்ள ஒரு பேக்கரி கடை முன் சாலையில் நிறுத்தி சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி சென்றது. படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு இறந்தார். பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி