உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிறுமியை கர்ப்பமாக்கியவாலிபருக்கு போக்சோ

சிறுமியை கர்ப்பமாக்கியவாலிபருக்கு போக்சோ

சிறுமியை கர்ப்பமாக்கியவாலிபருக்கு போக்சோஓசூர்:தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் தர்சன், 19. இவரும், அப்பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமியும் கடந்த சில ஆண்டுக்கு முன், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்த போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் உள்ளார். அவரது பெற்றோர் கூலி வேலைக்கு சென்ற பின், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி வீட்டிற்கு வந்த தர்சன், சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்து, 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தனர். போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து, தர்சனை கைது செய்தனர்.மின்வாரிய கேங்மேன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, கிருஷ்ணகிரி கிளை சார்பில், கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. திட்ட தலைவர் துரை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளராக பணிமாற்றம் செய்து, 6 சதவீதம் ஊதிய உயர்வை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை