உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ராகவேந்திரர் கோவிலில்வியாசராஜர் ஆராதனை விழா

ராகவேந்திரர் கோவிலில்வியாசராஜர் ஆராதனை விழா

ராகவேந்திரர் கோவிலில்வியாசராஜர் ஆராதனை விழாகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேய ராகவேந்திர ஸ்வாமி பிருந்தாவன ஆலயத்தில், 12வது ஆண்டு வியாசராஜர் ஆராதனை விழா நேற்று நடந்தது. இதில், ராம ஆஞ்சநேய சேவா ஸமிதி ட்ரஸ்ட், 3வது ஆண்டாக ஆராதனை கமிட்டியினருடன் இணைந்து, வியாசராஜர் ஆராதனை மற்றும் வாதிராஜர் ஆராதனை விழாவை நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று காலை, 9:30 மணிக்கு, வேத பாராயணம், சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், 10:30 மணிக்கு, ஆச்சார்யரால் உபந்நியாசம் நடந்தது. 11:30 மணிக்கு, புதுப்பேட்டை வீர ஆஞ்சநேய பஜனா மண்டலியினரின் பஜனை பாடல் நிகழ்ச்சி, 12:00 மணிக்கு, பல்லக்கு உற்சவம், தீர்த்தப் பிரசாதம் வழங்குதல் நடந்தது. இதையொட்டி, ராமர், சீதையுடன் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ