உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்

சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்

சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் நேற்று மாலை நடந்தது. மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜெகதாம்பிகா தலைமை வகித்தார். தலைவர் சந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். துணை தலைவர் ஜெயபிரபா வரவேற்றார். வங்கி ஊழியர் சம்மேளனம் அகில இந்திய துணை பொதுச்செயலாளர் ஹரிராவ் பேசினார். கருத்தரங்கில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவி வாசுகி பேசியதாவது: தற்போது ஜா, மதவெறி மற்றும் பெண்கள் மீதான தாக்குதல் நடந்து வருகிறது. 3 மாத குழந்தையிலிருந்து, 80 வயது மூதாட்டி வரை பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். சமூகத்தில் நன்றாக நடக்க வேண்டும் என பெண் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது போல், பெண்களை மதித்து நடக்க, சிறு வயதிலிருந்தே ஆண் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். பெண்களை பாதுகாப்போம், பெண்களுக்கு எதிரான வன்முறையை அடக்குவோம்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை