மேலும் செய்திகள்
மது பாட்டில் கடத்தியவர் கைது
02-Mar-2025
காரில் குட்கா கடத்தியவர் கைதுஓசூர்:ஓசூர், மத்திகிரி போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலர் தண்டபாணி மற்றும் போலீசார், டி.வி.எஸ்., சோதனைச்சாவடியில் வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஹூண்டாய் சான்ட்ரோ காரை நிறுத்தி சோதனை செய்த போது, 34 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளியில் இருந்து, ராயக்கோட்டைக்கு புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது. காரை ஓட்டி வந்த உள்ளுகுறுக்கை கிராமத்தை சேர்ந்த வாஜித், 28, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 32,000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
02-Mar-2025