உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாம்பாறு அணையிலிருந்துபாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

பாம்பாறு அணையிலிருந்துபாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

பாம்பாறு அணையிலிருந்துபாசனத்துக்கு தண்ணீர் திறப்புஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, பாம்பாறு அணை நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்திற்காக, 4,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் நேற்று முதல், 120 நாட்களுக்கு, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேற்று தண்ணீர் திறந்து வைத்தார்.இதன் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்திலுள்ள மிட்டப்பள்ளி, ஓபகாவலசை, போத்தராஜன்பட்டி, மூன்றம்பட்டி உட்பட, 12 கிராமங்களை சார்ந்த, 2,501 ஏக்கர் நிலங்களும், தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டத்திலுள்ள தா.அம்மாப்பேட்டை, வேடக்கட்டமடுவு, மேல்செங்கம்பாடி, ஆண்டியூர் ஆகிய, 4 கிராமங்களிலுள்ள, 1,499 ஏக்கர் என மொத்தம், 16 கிராமங்களிலுள்ள, 4,000 ஏக்கர் நிலங்கள், பாசன வசதி பெற உள்ளன.இதில், நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், வேளாண் துறை இணை இயக்குனர் பச்சையப்பன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் ஜெயக்குமார், ஊத்தங்கரை தாசில்தார் திருமால், பி.டி.ஓ.,க்கள் பாலாஜி, தவமணி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ