உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குட்டையில் விழுந்த யானை மீட்பு

குட்டையில் விழுந்த யானை மீட்பு

குட்டையில் விழுந்த யானை மீட்புதேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகம் அய்யூர் வனப்பகுதியில், யானைகள் அதிகம் உள்ளன. தற்போது கோடை காலத்தால் தண்ணீர் தேடி ஊருக்குள் வர துவங்கியுள்ளன. நேற்று முன்தினம் இரவு, 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை தண்ணீர் தேடி மூர்க்கண்கரை கிராமத்தில் புகுந்தது.ஒரு விவசாய தோட்டத்தில், 10 அடி ஆழ குட்டையில் தண்ணீர் குடிக்க இறங்கியது. அப்போது குட்டையில் தவறி விழுந்து வெளியேற முடியாமல் பிளிறியது. நீண்ட நேரம் போராடியும் வெளியேற முடியவில்லை. அப்பகுதி மக்கள் தகவலின்படி தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் குழுவினர் சென்றனர். பொக்லைன் வாகன உதவியுடன் யானையை மீட்டனர். ஆக்ரோஷத்துடன் வெளியேறிய யானையை, அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ