மேலும் செய்திகள்
எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்
01-Mar-2025
புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைதுஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுார் ஸ்டேஷன் எஸ்.ஐ., கணேஷ்பாபு மற்றும் போலீசார், பாகலுார் சர்க்கிள் பகுதியில் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த மாருதி எர்டிகா காரை நிறுத்தி சோதனை செய்த போது, 21,000 ரூபாய் மதிப்புள்ள, 20 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது. இதனால், காரை ஓட்டி சென்ற கர்நாடகா மாநிலம், பெங்களூரு கே.ஆர்.புரா பகுதியை சேர்ந்த பெட்டிக்கடை நடத்தி வரும் சீனிவாஸ், 50, என்பவரிடம் விசாரித்தனர். பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் இருந்து, ஓசூர் சாந்தபுரம் பகுதிக்கு புகையிலை பொருட்களை கடத்தி செல்வதும், தவறுதலாக பாகலுார் பகுதிக்கு சென்றதும் தெரிந்தது. சீனிவாசை கைது செய்த போலீசார், புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து, அவரை ஜாமினில் விடுவித்தனர்.
01-Mar-2025