உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்புகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 171 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த, 3 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நேற்று காலை நீர்வரத்து, 193 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுறக் கால்வாயில், 171 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை மொத்த உயரமான, 52 அடியில், கடந்த, 2 நாட்களாக, 48 அடியாக நீர்மட்டம் உள்ளது. மேலும், பாம்பாறு அணை, சின்னாறு அணை மற்றும் பாரூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுள்ளது. பாம்பாறு அணை மொத்த உயரமான, 19.60 அடியில் நேற்று, 17.04 அடியாகவும், சின்னாறு அணை மொத்த உயரமான, 32.80 அடியில், 12.99 அடியாகவும், பாரூர் பெரிய ஏரி மொத்த உயரமான, 15.60 அடியில், 9.10 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ