உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோவில் பிரச்னை: அமைதி பேச்சுவார்த்தை

கோவில் பிரச்னை: அமைதி பேச்சுவார்த்தை

கோவில் பிரச்னை: அமைதி பேச்சுவார்த்தைகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி தாலுகா, பூவத்தி பஞ்.,ல், குருதொட்டனுார், சிக்கபூவத்தி, பூவத்தி என, 3 கிராமங்கள் உள்ளன. இங்கு பல்வேறு சமூகங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இதில், 3 சமூகத்திற்கு சொந்த மான, கொல்லி மாரியம்மன், மண்டு மாரியம்மன் கோவில், 3.43 ஏக்கர் பரப்பில் உள்ள நிலத்தில் அமைந்துள்ளது.பல ஆண்டுகளாக இம்மூன்று சமூகத்தினர் கரகம் சுமந்து, திருவிழாக்களை நடத்தி வருகின்றனர். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், 12 அம்மன்களுக்கு தனித்தனி கோவில்கள் உள்ளன. இந்நிலையில், பஞ்., மற்றொரு சமுதாய மக்கள், 250க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து, அப்பகுதியில் காலியாக உள்ள நிலத்தில் கோவில் கட்டும் பணியை துவங்குவதாக மற்ற, 3 சமூகத்தினர் சேர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் புகாரளித்தனர். இவர்கள் ஒரு புறமும், புதிதாககோவில் கட்ட முயலும் சமூகத்தினர் ஒரு புறமுமாக பிரிந்ததால் பிரச்னை அதிகரித்தது.அவர்களிடம் போலீசார், வருவாய்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கனவே, கோவிலை நிர்வகிக்கும், மூன்று சமூகத்தினருடன், மற்ற சமூகத்தினரும் சேர்ந்து கோவில் செலவுகளை பகிர்ந்து கொள்வதற்கோ, புதிய கோவில் கட்டுவதற்கோ, தற்போது கோவிலை நிர்வகித்து வரும் மூன்று சமூக மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை.இதையடுத்து நேற்று, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ஷாஜகான் தலைமையில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்ததில் முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து இரு தரப்பிலும் முக்கிய நபர்களுடன், மீண்டும் ஓரிரு நாளில் பேச்சு நடத்தி, உரிய தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி