மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ ஜியோ கூட்டம்
01-Sep-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு, ஜாக்டோ-ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், மாதப்பன் தலைமை வகித்தனர். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் தியோடர் ராபின்சன் பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் கோரிக்கை குறித்து விளக்கினார்.இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்காமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களைய வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்: 243ஐ உடனே ரத்து செய்ய வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
01-Sep-2025