உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உறைவிட பள்ளியை நிர்வகிக்க விண்ணப்பிக்கலாம்

உறைவிட பள்ளியை நிர்வகிக்க விண்ணப்பிக்கலாம்

ஓசூர், தளி அருகே, உறைவிட பள்ளியை நிர்வகிக்க விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு முனிராஜ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தளி ஒன்றியத்திலுள்ள கக்கதாசம் என்.எஸ்.சி.பி.ஏ.வி., உறைவிட பள்ளியை நடத்த, தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ) விண்ணப்பிக்கலாம். இதற்கு, தொண்டு நிறுவனங்கள் கண்டிப்பாக பதிவு செய்து புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழக அரசு அல்லது மத்திய அரசால் நீக்கம் செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் பட்டியலில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தொண்டு நிறுவனங்கள், 80 ஜி அல்லது 12 ஏஏ விலக்கு சான்றிதழ் பெற்றிருப்பதோடு, வருமான வரி கணக்கு எண் வைத்திருக்க வேண்டும்.அரசின் பல்வேறு திட்டங்களில், மானியம் பெற்று செயல்பாடுகளை மேற்கொள்ள, https://ngodarpan.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, தனி அடையாள ஐ.டி., பெற்றிருக்க வேண்டும். என்.சி.பி.ஏ.வி., உண்டு உறைவிட பள்ளிகளை நிர்வகிக்கும் அனைத்து தொண்டு நிறுவனங்களும், இந்த இணையதளத்தில் பதிவு செய்து, பதிவு சான்றிதழை மாவட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்களின் அனைத்து சான்றின் நகல் மற்றும் அனுபவ சான்றுகளுடன், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட அலுவலக முகவரிக்கு, அக்., 15ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 73730 02732, 97889 15235 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !