உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேர்வு அறையில் பிளஸ் 2 மாணவிக்குபாலியல் தொல்லை; போலீசார் விசாரணை

தேர்வு அறையில் பிளஸ் 2 மாணவிக்குபாலியல் தொல்லை; போலீசார் விசாரணை

தேர்வு அறையில் பிளஸ் 2 மாணவிக்குபாலியல் தொல்லை; போலீசார் விசாரணைhttps://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nsdxqsix&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே, பிளஸ் 2 மாணவிக்கு தேர்வு அறையில், பாலியல் தொல்லை கொடுத்த முதுகலை ஆசிரியரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி அருகே, ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தவர், 17 வயது மாணவி. இவர் நேற்று திருவண்ணாமலை சாலையிலுள்ள அஞ்சூர் - ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடந்த உயிரியல் தேர்வு எழுத சென்றுள்ளார். தேர்வு அறையில் மேற்பார்வையாளராக, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் இருந்தார். மாணவியிடம் பேசுவது போல், அவர் மீது கை வைத்தவாறு, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவி தேர்வை சரிவர எழுத முடியவில்லை. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவி, சோகத்துடன் இருந்துள்ளார். இது குறித்து மாணவி பயின்ற தனியார் பள்ளியின் முதல்வர் கேட்டபோது, தேர்வு அறையில் நடந்ததை மாணவி கூறியுள்ளார்.பள்ளி முதல்வர் இது குறித்து, தேர்வு மைய பொறுப்பாளரான மேகலசின்னம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் மற்றும் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார், ஆசிரியரை அழைத்து சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ