உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மக்கள் தொடர்பு திட்ட முகாம்205 பேருக்கு நலத்திட்ட உதவி

மக்கள் தொடர்பு திட்ட முகாம்205 பேருக்கு நலத்திட்ட உதவி

மக்கள் தொடர்பு திட்ட முகாம்205 பேருக்கு நலத்திட்ட உதவிஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, தும்மனப்பள்ளி கிராமத்தில், மாவட்ட கலெக்டர் தலைமையில் நேற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற கலெக்டர், அவற்றை உரிய அரசுத்துறை அலுவலர்களிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.தொடர்ந்து, பட்டா மாற்றம், விபத்து நிவாரணம், புதிய ரேஷன் கார்டு, தையல் இயந்திரம், வேளாண் கருவிகள், இலவச வீட்டுமனைப்பட்டா உட்பட மொத்தம், 205 பயனாளிகளுக்கு, 17.23 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார். முன்னதாக, அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். ஓசூர் சப்கலெக்டர் பிரியங்கா, சமூக பாதுகாப்பு திட்ட சப்கலெக்டர் தனஞ்செயன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் இந்திரா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ