உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாவட்டத்தில் மாணவி உட்பட 7 பேர் மாயம்

மாவட்டத்தில் மாணவி உட்பட 7 பேர் மாயம்

மாவட்டத்தில் மாணவி உட்பட 7 பேர் மாயம்ஓசூர்:கிருஷ்ணகிரி அடுத்த மிட்டஹள்ளி அருகே மச்சகண்ணன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செந்தில், 34. ஓசூர் தின்னுார் எல்.என்., நகரில் வசிக்கிறார். இவர் மனைவி உமா, 34. இவர்களுக்கு, 6ம் வகுப்பு படிக்கும், 11 வயது மகள், 4ம் வகுப்பு படிக்கும், 10 வயது மகன் உள்ளனர். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு குழந்தைகளுடன் வீட்டிலிருந்து வெளியே சென்ற உமா திரும்பவில்லை. அவரது கணவர் மத்திகிரி போலீசில் கொடுத்த புகாரில், பழைய மத்திகிரியை சேர்ந்த ஐயப்பன் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் தேடி வருகின்றனர்.அஞ்செட்டி அருகே சிவபுரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் மனைவி சுந்தரம்மா, 21. தளி அருகே ஒசபுரத்தில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். கடந்த, 17 மாலை, 5:00 மணிக்கு வீட்டிலிருந்து மாயமானார். கணவர் புகாரில், சிவபுரத்தை சேர்ந்த ஷாதேவா, 22, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.தளி அருகே, ஜீகூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜேந்திரப்பா மகள் பிந்து, 24. கடந்த, 20 மாலை, 5:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தந்தை தளி போலீசில் கொடுத்த புகாரில், அதே கிராமத்தை சேர்ந்த குமார், 27, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.அஞ்செட்டி அருகே மிலிதிக்கி கிராமத்தை சேர்ந்தவர் வையாபுரி மகள் நயன்தாரா, 19. தனியார் மருத்துவமனை செவிலியர். கடந்த, 18 காலை பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை புகார் படி, அஞ்செட்டி போலீசார் தேடி வருகின்றனர்.பர்கூரை சேர்ந்தவர், 16 வயது பிளஸ் 2 மாணவி. கடந்த, 15ல், பள்ளிக்கு சென்றவர் மாயமானார். மாணவியின் தாய் நேற்று முன்தினம் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். அதில், பர்கூர் அடுத்த மேல்கொட்டாய், பறையூரை சேர்ந்த கூலித்தொழிலாளி குருமூர்த்தி, 20, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ