உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பர்கூர் சரக விளையாட்டு போட்டி 700 மாணவ, மாணவியர் பங்கேற்பு

பர்கூர் சரக விளையாட்டு போட்டி 700 மாணவ, மாணவியர் பங்கேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், பர்கூர் சரக அளவிலான, 2 நாள் விளையாட்டு போட்டிகள், குட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நேற்று துவங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். இதில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்-ளிகளை சேர்ந்த, 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களுக்கு, 100 மீ., 200, 300, 400, 800,1,500, 3,000, ஓட்ட போட்டியும், தொடர் ஓட்டமும், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உட்பட, 17 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்ப-டுகிறது. நேற்று நடந்த ஓட்ட போட்டியின்போது மாணவி ஒருவர், தவறி கீழே விழுந்ததில், மயக்கம் அடைந்தார். ஆனால் முதலுதவி செய்-வதற்கான மருத்துவ வசதியும், 108 அவசரகால ஆம்-புலன்ஸ் வசதியும் இன்றி, பாதிக்கப்பட்ட மாணவி நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்தார். பின், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாண-வியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். அதன்பிறகே விளையாட்டு அரங்கில், 108 அவசரகால ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ