உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக் மீது டிராக்டர் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

பைக் மீது டிராக்டர் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

கிருஷ்ணகிரி: பைக் மீது, டிராக்டர் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார். கடலுார் மாவட்டம், ஆண்டி பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி, 40, தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த, 5ல், இவரது மனைவி திலகவதி, 36, என்பவருடன் ஹோண்டா எச்.எப்., பைக்கில் நாய்க்கனுார் அருகில், ஊத்தங்கரை - திருவண்ணாமலை சாலையில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர், பைக் மீது மோதியது. இதில், பழனி இறந்தார். திலகவதி படுகாயங்களுடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி