மேலும் செய்திகள்
ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத வகுப்பறை
25-Aug-2024
ஓசூர்: ஓசூர் அருகே, முகளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 110 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மூன்று வகுப்பறை கட்டடங்கள் மட்டுமே உள்ளதால், மாணவ, மாணவியர் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் தலைமையாசிரியர் ராமலிங்க ஆச்சாரி மற்றும் பஞ்., தலைவர் மகேஷ் ஆகியோர், கூடுதல் வகுப்பறை கட்டடடங்கள் கட்டி தருமாறு, டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் லிமிடெட் (டீல்) நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தனர்.இதையேற்று, சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து, 90 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதலாக, ஆற வகுப்பறைகளை கட்ட டீல் நிறுவனம் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்றது. தொடர்ந்து, டீல் நிறுவன வணிக தலைவர் அஞ்சான் கோசல், சமூக பொறுப்புணர்வு திட்ட தலைவர் சண்முகம் ஆகியோர், நேற்று பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர். பொதுமேலாளர் ரமணராவ், டிவிஷனல் மேலாளர் ஹரிஹரசுப்பிரமணியம், அசோசியேட் குரூப் மேலாளர் முருகேஷ், கேசவன், வி.ஏ.ஓ., பிரேமா உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, சமூக பொறுப்புணர்வு திட்ட செயல் அதிகாரி பிரபு, சுரேஷ் செய்திருந்தனர்.
25-Aug-2024