மேலும் செய்திகள்
விளைபொருட்கள் உற்பத்தி விதைகள் பங்கு முக்கியம்
25-Aug-2024
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி ராமர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜா-தெய்வானை தம்பதியினர் கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் டிரைவராக உள்ளார்.இளைய மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். மகள் நந்தினி, 18, அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்தார். டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்த அவர், வேலுார் தனியார் மையத்தில் நீட் பயிற்சிக்கு சேர்ந்தார். இரண்டாவது முயற்சியில், 580 மதிப்பெண்கள் பெற்று, நீட் தேர்வில் வெற்றி பெற்றார். அவருக்கு தஞ்சை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர் சீட் கிடைத்துள்ளது.மாணவி நந்தினியை பாராட்டி, கல்வியாளர் ராகவன் நேற்று ஸ்டெதஸ்கோப் வழங்கி, நிதியுதவி வழங்கினார். அபாலா மன வளர்ச்சி குன்றியோர் இல்ல நிர்வாகி கவுதமன், தங்க கம்மல் பரிசாக வழங்கினார். நிருபர்களிடம் நந்தினி கூறுகையில், ''நீட் தேர்வு கடினமானது அல்ல. மனதை தளர விடாமல், விடாமுயற்சியுடன் படித்து தேர்வெழுதினால், கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். மலை கிராமங்களில் போதிய மருத்துவ வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். எதிர்காலத்தில் மலை கிராம மக்களுக்கு சேவை செய்வதே எனது நோக்கம்,'' என்றார்.
25-Aug-2024