மனைவி நல வேட்பு விழா
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மனவளக்கலை மன்ற அறக்கட்-டளை மற்றும் உலக சமுதாய சேவா சங்கம் ஆகியவை சார்பில், வேதாத்திரி மகரிஷியின் மனைவி அன்னை லோகாம்பாள், 110வது பிறந்தநாளையொட்டி, ஓசூரில் மனைவி நல வேட்பு விழா நேற்று நடந்தது. 300 தம்பதிகள் பங்கேற்று, ஒருவருக்கு ஒருவர் நேருக்கு நேராக அமர்ந்து, கனிந்த பழங்களை கொடுத்து, அன்பை பரிமாறி கொண்டனர். மேலும், கைகளை பற்றிக்-கொண்டு, தங்களது திருமணம் முடிந்ததில் இருந்து, இதுவரை நடந்த நிகழ்வுகளை நினைத்து கொண்டனர். உலக சமுதாய சேவா சங்கத்தின் கர்நாடகா மண்டல தலைவர் தனபதி, துணைத்-தலைவர் விஜயா தனபதி ஆகியோர், மனைவியின் மாண்பு பற்றி பேசினர். ஓசூர் ஜி.எஸ்.டி., உதவி கமிஷனர் ராஜேஷ், ஆழியாறு அறிவு திருக்கோவில் அறங்காவலர் சண்முகவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.