உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குழந்தையை கடித்துகுதறிய தெருநாய்

குழந்தையை கடித்துகுதறிய தெருநாய்

குழந்தையை கடித்துகுதறிய தெருநாய்தளி:கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த ஜவளகிரி அருகே பனசமானதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா - சித்ரா தம்பதியருக்கு, 5 வயதில் பெண் குழந்தை, 3 வயதில் குஷால் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று வழக்கம்போல் ராஜப்பா, சித்ரா வேலைக்கு சென்று விடவே, குழந்தைகள் இருவரும் பாட்டி வெங்கடம்மா வீட்டில் இருந்தனர். குழந்தை குஷாலை வீட்டு கேட்டின் அருகே பாட்டி அழைத்து வந்த போது, அங்கு நின்றிருந்த தெருநாய் திடீரென குழந்தையின் மூக்கு, கன்னம், காது, முகம் போன்ற இடங்களில் விடாமல் கடித்து குதறியது.நாயை விரட்டிய வெங்கடம்மா, அக்கம்பக்கத்தினர் உவியுடன் குழந்தையை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை கடித்த தெரு நாயை, அப்பகுதி மக்கள் ஆத்திரத்தில் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை