உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கெலவரப்பள்ளி அணைக்குநீர்வரத்து அதிகரிப்பு

கெலவரப்பள்ளி அணைக்குநீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 290.83 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், நேற்று காலை நீர்வரத்து, 409.49 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 203.67 கன அடி, வலது, இடது கால்வாயில், 88 கன அடி என மொத்தம், 291.67 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணையிலிருந்து நேற்று திறக்கப்பட்ட நீரில் ரசாயனம் அதிகமாக கலந்திருந்ததால், தென்பெண்ணை ஆறு மற்றும் வலது, இடது பாசன கால்வாய்களில், 4வது நாளாக நேற்றும் ரசாயன நுரை அதிகமாக காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி