மேலும் செய்திகள்
17 வயது மாணவியை மணந்தவர் மீது வழக்கு
29-Sep-2025
ஊத்தங்கரை, ஊத்தங்கரையில் இன்று முதல், 14ம் தேதி வரை, ஊத்தங்கரை வாசிப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், முதலாமாண்டு புத்தக திருவிழா ஊத்தங்கரையில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைக்கிறார். காலை, 10:00 மணிக்கு புத்தக அரங்கத்தை பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் தொடங்கி வைக்கிறார். மாலை, 4:00 மணிக்கு, சிந்தனை அரங்கத்தை ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தொடங்கி வைக்கிறார். ஐந்து நாட்களும் தினமும் மாலை, 6:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. தினமும் காலை, 9:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை, புத்தகங்கள் விற்பனை நடக்கும் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற உள்ளன. அனுமதி இலவசம். இவ்வாறு விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.
29-Sep-2025