உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பங்குனி உத்திர திருவிழா

பங்குனி உத்திர திருவிழா

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த அஸ்தகிரியூரில் கந்தர் மலை முருகன் கோவிலில், நேற்று நடந்த பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள், 25 அடி நீளம் முதல், பல்வேறு அளவுகளில் வேல் குத்தியும், காவடி மற்றும் பால்குடம் எடுத்தும் 4 கி.மீ., துாரம் ஊர்வலமாக வந்தனர். பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோன்று பத்திரெட்டிஹள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார், ஒடசல்பட்டி, பொம்மிடி, ரேகடஹள்ளி, அண்ணா நகர், பையர்நத்தம் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ