உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கும்பாபிஷேகத்தையொட்டி பால்குட ஊர்வலம்

கும்பாபிஷேகத்தையொட்டி பால்குட ஊர்வலம்

காவேரிப்பட்டணம்:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சாப்பர்த்தி பஞ்., பனகமுட்லு கிராமத்தில், 1,800 ஆண்டு பழமையான தொட்டப்பன், காவேரியம்மன் மற்றும் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி, நேற்று பெண்கள் பால்குட ஊர்வலம் நடந்தது. மேலும் அம்மனுக்கு நேற்று காலை சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களுடன், மேளதாளங்கள் முழங்க, பக்தி பாடல்களை பாடியவாறு, காவேரிப்பட்டணம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். கோவிலில், அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !