மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் பராமரிப்பு பணி மும்முரம்
25-Apr-2025
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு, மே மாதம் வரை, பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் திருவிழா, எருதாட்டம் மற்றும் கன்று விடும் திருவிழா நடப்பது வழக்கம்.இதில், குறிப்பிட்ட துாரத்தை குறைந்த வினாடிகளில் கடக்கும் காளைகள், கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதன்படி, நேற்று வேப்பனஹள்ளி ஒன்றியம் பில்லனக்குப்பம் பஞ்., அடுக்குமாடி குடியிருப்பு பகுதி கிராமத்தில், கன்று விடும் திருவிழா நடந்தது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 250க்கும் மேற்பட்ட கன்றுகளை அழைத்து வந்திருந்தனர். அவைகளுக்கு கோபூஜை செய்து, வாடிவாசல் வழியாக ஒவ்வொரு கன்றாக அவிழ்த்து விடப்பட்டது.குறிப்பிட்ட துாரத்தை குறைந்த வினாடியில், கடந்த கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, முதல் பரிசாக, 50,000 ரூபாய், 2ம் பரிசாக, 40,000, 3-ம் பரிசாக, 30,000 ரூபாய் என மொத்தம், 111 கன்றுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவை காண, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் வந்திருந்தனர். குருபரப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
25-Apr-2025