பொது அமைதிக்கு குந்தகம்3 பேருக்கு போலீசார் காப்பு
பொது அமைதிக்கு குந்தகம்3 பேருக்கு போலீசார் 'காப்பு'கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி தாலுகா எஸ்.ஐ., புகழ்வாணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் செம்படமுத்துார் பாரத கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்ற மூவர், பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர். அவர்களை போலீசார் எச்சரித்தும் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை. இதையடுத்து ரகளையில் ஈடுபட்ட பெல்லாரம்பள்ளி வீரமணி, 30, செம்படமுத்துார் ராமச்சந்திரன், 37, கோவிந்தராஜ், 30 ஆகிய மூவரையும், போலீசார் கைது செய்தனர்.