ரூ.36.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
ரூ.36.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், தடிக்கல் கிராமத்தில், அனைத்து கிராம மேம்பாட்டு திட்டத்தில், 16.55 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறப்பு விழா மற்றும் ஒன்றிய பொதுநிதியில் இருந்து, 19.75 லட்சம் ரூபாய் மதிப்பில், தேன்கனிக்கோட்டை - பஞ்சப்பள்ளி சாலையில் இருந்து, தட்டசந்திரம் கிராமம் வரை தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்க விழா, நேற்று நடந்தது. தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தலைமை வகித்து, அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து, தார்ச்சாலை பணியை பூஜை செய்து துவக்கி வைத்தார். பி.டி.ஓ., சதீஷ்பாபு, பொறியாளர் குமார், இ.கம்யூ., நிர்வாக குழு உறுப்பினர் லகுமையா, மாவட்ட குழு உறுப்பினர்கள் பூதட்டியப்பா, சாம்ராஜ், கிருஷ்ணன், மாரப்பன், ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.